பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் வீட்டின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.பெலியத்தை பதுதியில் உள்ள செயலாளரின் வீட்டின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தென்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை எனவும் வீட்டின் ஜன்னல் பகுதி மட்டும் சேதம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.