Monday, May 23, 2011

ஈழத் தமிழர் விவகாரத்தில் தாத்தா கருணாநிதி ஆடிய நாடகத்தை பேரன் தயாநிதிமாறன் அம்பலப்படுத்தினாராம்: விக்கிலீக்ஸ் திடுக்கிடும் தகவல்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி, இந்திய மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் முகமாக மத்திய அமைச்சர்களை பதவி விலகச் செய்வதாக அறிவிப்பு செய்து, சென்னை கடற்கரையில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இரண்டு மணி நேர உண்ணாவிரதம் இருந்தது உலகத்தமிழ் மக்களை திசை திருப்புவதற்காக போடப்பட்ட நாடகம் என அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளதாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
2008ம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னையில் இருந்த அமெரிக்க துணை தூதர் எண்ட்ரூ சிம்கின் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, ஓர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் தயாநிதி மாறனுடனும், காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸுடனும் தான் பேசிய விபரம் என்னவென்பதை குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் மூலம், இத்தகவல்களை அறிந்துகொண்டதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

கலைஞர் இருந்த உண்ணாவிரதம் தொடர்பாக 'தி ஹிந்து' ஆங்கில நாளேடு, விக்கிலீக்ஸின் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

தி.மு.க ஆட்சியின் போது மின்வெட்டு பிரச்சினை, அதனால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த கடும் கோபம் என்பவற்றை திசை திருப்புவதற்காகவும், ஈழத்தமிழர் விடயத்தில் காங்கிரசின் செயல்பாடுகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவுமே, மத்திய அமைச்சர்களை பதவி விலக செய்ய போவதாக கலைஞர் கருணாநிதி நாடகம் நடத்தியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.