சிறீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், தற்போதைய ஐ.நாவுக்கான பிரதி அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பொன்சேகாவைப் போல சிறீலங்கா அரசுக்கு எதிரான சாட்சியாக மாறிவிடலாம் என சிறீலங்கா அரசு அச்சமடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
சில்வாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா, பாதுகாப்புச் செயலாளரும், சகோதரருமான கோத்தபாயா ராஜபக்சாவை பணித்துள்ளார்.
சில்வாவுக்கு கொழும்பில் வீடும், காணியும் வழங்குவதற்கு கோத்தபாயா பரிந்துரைகளை மேற்கொண்டபோதே மகிந்தா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கோத்தாவின் பரிந்துரையை தொடர்ந்தே பொன்சேகாவையும் தான் இராணுவத்தளபதியாக நியமித்ததாக மகிந்த தெரிவித்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.