Friday, May 20, 2011

இராணுவமயமாகும் சிறீலங்கா – 28 தளங்களில் மாணவர்களுக்கு பயிற்சி

சிறீலங்காவின் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்கள் கட்டாய இராணுவப்பயிற்சி பெற்றிருக்கவேண்டும் என்ற சிறீலங்காவின் புதிய சட்டங்களுக்கு பலத்த எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளபோதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்கா அரசு தீவிரமாக உள்ளது.

மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு 28 இராணுவத்தளங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா உயர் கல்வி அமைச்சகத்தின் செயலாளர் சுனில் ஜெயந்தா நவரட்னா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் நாளுக்கு முன்னர் குறிப்பிட்ட முகாம்களில் மாணவர்கள் தம்மை பதிவு செய்துகொள்ளவேண்டும். சிறீலங்கா அரச தலைவர் அலுவலகமான அலரி மாளிகையில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை தொடர்ந்து பயிற்சிகள் ஆரம்பமாகும்.

இந்த திட்டத்திற்கு 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10,000 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. அதில் 4,069 ஆண்களும், 5,931 பெண்களும் அடங்கியுள்ளனர். 21 நாட்கள் வழங்கப்படும் பயிற்சிகள், இராணுவ, கடற்படை, வான்படை முகாம்களில் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவின் இந்த திட்டத்திற்கு சிறீலங்கா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.