இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏற்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை ஆதாரமாக வைத்து சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படையினருக்கு எதிரான வழக்குகளை 30 நாடுகளில் தொடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படவுள்ள இந்த வழக்குகளில் சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகள் பலரின் விபரங்கள் இணைக்கப்படவுள்ளன. இதனிடையே, சிறீலங்கா மீதான அழுத்தங்களை அதிகரிக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலிதாவும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.