Wednesday, May 25, 2011

உலகின் முதல் மானங்கெட்ட பத்துப் பேரில் கருணாநிதியின் ஊழல் வாரிசு ராசாவிற்கு 2வது இடம் - ரைம்ஸ் இதழ்.

உலகின் மிகவும் அவமானகரமான மானங்கெட்ட பத்துப்பேரின் பட்டியலை உலகப்புகழ் பெற்ற ரைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்ஸனிற்கு அடுத்தபடியாக கருணாநிதியின் ஊழல் வாரிசான ராசா 2ம் இடம் பிடித்து பெருமைபெற்றுள்ளார். கருணாநிதியின் ஊழல் வாரிசாக ராசா விழங்குவதற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமே இந்த ரைம்ஸ் இதழின் பட்டியலில் வரலாற்றில் முதல்தடவையாக ஒரு தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளமை அமைந்துள்ளது.

ராசா இந்தப்பட்டியலில் தெரிவானதற்கு ரைம்ஸ் இதழ் தெரிவித்துள்ள காரணம். "இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டணி அமைச்சரவையை ஆட்டம் காணவைத்து இருக்கின்றது இந்த மெகா ஊழல். இப்படி ஓர் ஊழல் அந்த நாட்டின் சரித்திரத்திலேயே இதுவரை நடந்தது இல்லை. இதற்கு காரணகர்த்தாவாக இருந்த ஆ.ராசாவின் கட்சியும் சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்திய நீதித்துறைக்கே உரிய நத்தை வேகத்தில் இந்த வழக்கு நடக்கிறது!" என்று ரைம்ஸ் இதழ் வேதனை புகழாரம் சூட்டியுள்ளது.

இதுவரை இந்த விடயத்தில் கருத்துச் சொல்லிவந்த கருணாநிதி குற்றமற்றவர்களாக நிரூபித்து வெளியே வருவோம் என்றும் இது ஆ.ராசா தலித் என்பதால் பழிவாங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் எனவும் கூறிவந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற ரைம்ஸ் இதழ் கருத்துக் கணிப்பு மூலமாக இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த உலகமகா ஊழலின் அடிப்படையில்தான் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைதாகி சிறை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுரில் சாதனைகளையும் வேதனைகளையும் சாதித்து வந்த கருணாநிதி கும்பல் இன்று சர்வதேச அளவில் தமது பெயரை நிலைநாட்டி இந்த ஆண்டின் மிகவும் மானங்கெட்ட நபர்கள் எனப் பட்டம் பெற்றுள்ளனர். ரைம்ஸ் இதழுக்கு யார் சொன்னார்களோ கருணாநிதிக்கு பாராட்டுவிழாக்கள் நடாத்துவதும் பட்டங்கள் வழங்கி கௌரவப்படுத்துவதும் அவ்வளவு விருப்பம் என்று?

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.