Tuesday, April 19, 2011

எமது அதிகாரிகள் மீது தாக்குதல் நடந்தால் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

கொழும்பில் உள்ள ஐ.நா அதிகாரிகள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டால் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்கா அரசை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து அதற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பெருமளவில் நடத்தப்போவதாக சிறீலங்கா அரசு எச்சரித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனவும் கருதப்படுகின்றது.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, கொழும்பில் உள்ள தமது பணியாளர்களின் பாதுகாப்புக்கு சிறீலங்கா அரசே பொறுப்பு என ஐ.நாவின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நாம் எமது முடிவை சிறீலங்கா அரசுக்கு தெளிவாக தெரிவித்துள்ளோம். அதாவது கொழும்பில் உள்ள ஐ.நா பணியாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிறீலங்கா அரசுக்கு உள்ளது.

அவர்கள் பாதிக்கப்பட்டால் அதனை ஐ.நா பாரதூரமான விடயமாகவே கருதும். ஐ.நா அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் எந்ந பதவி நிலையில் இருக்கின்றனர் என்பது இங்கு முக்கியமல்ல. எமது அலுவலகத்தில் பணியாற்றும் சகல பணியளர்களினதும் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எமது அறிக்கை தொடர்பில் வெளியேவந்துள்ள தகவல்கள் உண்மையானவை. ஆனால் அவை முழுமையான அறிக்கை அல்ல. அதனை யார் ஊடகங்களுக்கு வெளியிட்டது என்பது எனக்கு தெரியாது. அது சிறீலங்கா ஊடகங்களில் தான் வெளிவந்துள்ளது. சிறீலங்கா அரசுக்கு அறிக்கையை அனுப்பிய உடன் அது ஊடகங்களில் வெளிவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.