இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இலங்கை அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தாம் அதிருப்தி கொள்வதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளதுடன், இது குறித்து தாம் அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் என இலங்கை அரச வட்டாரங்கள் கூறியுள்ளன.
இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரியப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு சமர்த்திருக்கும் அறிக்கைக்கு இந்தியா, பாகிஸ்தான், தென்ஆபிரிக்கா, மலேசியா, இந்தோனேசியா உட்பட சில அணிசேரா நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன என்றும் சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அந்த நாடுகள் கொண்டிருக்கின்றன என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவின் செயற்பாட்டிற்கு இந்த நாடுகள் தமது எதிர்ப்பை தெரிவித்திருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.
நிபுணர்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் இந்தியா உட்பட அணிசேரா நாடுகளிடம் வேண்டுகோளை விடுத்திருந்தது. இதற்கென விசேட குழு ஒன்றையும் அமைத்து அந்தந்த நாடுகளுடன் தொடர்புகளையும் ஏற்படுத்தியிருந்தது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.