தமிழ் மக்கள் இப்போது உரிமை கேட்கும் நிலையில் இல்லை என்றும் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைத்தால் போதும் என்றும் சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிடைக்கமுடியாத உரிமைகளை கேட்டு காலம் கடத்துவதாகவும், தமிழ் மக்களுக்கு இப்போது தேவை உணவு மட்டுமே என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இங்குள்ள தமிழர்களின் உரிமை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்றும் இங்குள்ள தமிழ் மக்கள் தங்களின் பிரச்சினையை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து வந்து உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கிய காலம் மலையேறிவிட்டதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றும் ஈ.பி.டி.பி போன்ற அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளுடனும் பேச வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.