Monday, April 11, 2011

மருந்துப் பொருட்களை வழங்குவதற்காகக் குத்தகை பெற்ற இந்திய நிறுவனங்கள் இலங்கையை ஏமாற்றுகின்றனவாம்

இலங்கைக்கு தேவையான காலத்தில் மருந்து பொருட்களை பெற்றுத்தராத இந்திய நிறுவனங்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய அரசாங்கம் சுகாதார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவிற்கும், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் அதற்கு பொறுப்பான 10 இந்திய நிறுவனங்கள் தொடர்பாக இன்றைய சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மருந்து வகைகளை பெற்றுத் தர குத்தகை பெற்றுக் கொண்டுள்ள பல இந்திய நிறுவனங்கள், உரிய நேரத்தில் மருந்து பொருட்களை அனுப்பாமை மற்றும் தரத்தில் குறைந்த மருந்து பொருட்களை பெற்றுக் கொடுக்கின்றமையினால் அண்மை காலங்களில் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.