Tuesday, April 12, 2011

கியூபாவுக்கு எதிராக அமெக்கா செயற்படும் வேளைகளில் இலங்கையின் குரல் எமக்காக ஒலிக்கிறது-கியூபா தூதுவர் புளங்காகிதம்

50 வருடங்களுக்கும் மேலாக இலங்கை கியூபா உறவில் பல்வேறான செயற்பாடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் கியூபாவுக்கு எதிராக அமெக்கா செயற்படும் போதெல்லாம் இலங்கை கியூபாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்துள்ளது.
எமது நாடுகளுக்கிடையிலான உறவு பலம் பொருந்தியதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான கியூபா தூதுவர் நிர்சி யா கஸ்றோ யுவேரா தெரிவித்தார்.

வவுனியாவிற்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான கியூபா தூதுவர் நிர்சியா கஸ்றோ யுவேரா பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளையும் அரச அதிகாகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் அரச அதிகாகளுடனான சந்திப்பினை மேற் கொண்டிருந்த தூதுவர் வடபகுதி அபிவிருத்தி மற்றும் கல்வி நிலை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் மாலை வவுனியா தம்பா ஹோட்டலில் இடம்பெற்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கியூபா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் இலங்கை கியூபா நட்புறவு அமைப்பின் வவுனியா கிளையினையும் ஆரம்பித்து வைத்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.