இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் உதவி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது புதல்வி கனிமொழி ஆகியோருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
கருணாநிதியும், கனிமொழியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துரோகம் இழைத்ததாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடேசன் இந்தக் கடிதங்களை எழுதியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு ருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக அழுத்தம் கொடுக்குமாறு நடேசன் கோரியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் உரிய பதிலளிக்கத் தவறியதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், கனிமொழி குறித்த கடிதங்களுக்கு பதிலளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து போராட்டத்தைக் கைவிட்டால் இந்தியா மத்திய அரசாங்கம் உதவி வழங்கும் என கனிமொழி தமது பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும், 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் திகதி இந்தக் கடிதம் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈழமுரசை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமான இந்தியன் ஏசியன் நியூஸ் சேர்விஜ் (IANS) தகவல் வெளியிட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.