அமெரிக்காவினால் இலங்கை மீது சுமத்தப்பட்ட மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கத் தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இலங்கையில் உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு உத்தியோகபூர்வமான முறையில் பதிலளிக்கும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் மேற்பார்வையின் கீழ் இந்த பதில் அறிக்கை தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த அறிக்கையை ஜனாதிபதி பார்வையிட்டு ஒப்புதல் அளித்தன் பின்னர், பகிரங்கமாக இந்த பதில் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் நாட்டில் தொடர்ந்தும் உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.