ஐ.நா அறிக்கையைத் தொடர்ந்து யார் யார் அதற்கான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் எனப் பார்ப்போமா ?
1] யுத்த நடவடிக்கையின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை: அஸ்கிரிய பீடாதிபதி !
2] நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்: சஜித் பிரேமதாச !
3] ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மறைமுக நோக்கத்தை கொண்டது: கோத்தபாய ராஜபக்ஷ !
4] ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை பொய்யானது ஜே.வி.பி !
5] ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக மே தினத்தன்று ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதி ஏற்பாடு
இலங்கையில் உள்ள ஆளும் கட்சி, எதிர்கட்சி, மற்றும் பெளத்த மதத் தலைவர்கள் என அனைவரும் பாரபட்சம் பாராது ஐ.நா வின் அறிக்கையை எதிர்த்து ஓர் அணியில் திரண்டுள்ளனர். தற்போது தொழிலாளர் ஒன்றியங்களும் ஐ.நாவுக்கு எதிராகப் போர்கொடி தூக்க ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசு மீது ஐ.நா குற்றஞ்சாட்டிய உடனே , அனைத்து சிங்களவர்களும் ஓர் அணியில் திரண்டு, தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். ஆனால் தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் ? இல்லை என்ன தான் செய்துகொண்டு இருக்கிறோம் ? ஐ.நா அறிக்கையில் கூறியுள்ள விடையங்களுக்கு தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவிப்பதும், அதனை வரவேற்பதாக அறிவித்தல் விடுவதும், பாராட்டுவதுமாக எமது காலத்தைச் செலவிடுகிறோம் !
ஐ.நா அறிக்கையில் கூறப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட விடையங்கள் அனைத்தையும் , செயலாளர் நாயகம் உடனே நிறைவேற்றவேண்டும் என யாரும் அழுத்தங்களை இன்னும் கொடுக்க ஆரம்பிக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். சிங்களம் தனது ராஜதந்திரிகளை நாலா புறமும் அனுப்பியுள்ளது. ஒரு குழு ஐ.நாவைச் சந்திக்க, மற்றொரு குழு சார்க்நாடுகளைச் சந்திக்க, மற்றுமொரு குழு மேற்குலகைச் சந்திக்க என்று பல குழுக்கள் சென்று ராஜதந்திர நடவடிக்கைகளை முடிக்கிவிட்டுள்ளதோடு, ஐ.நா அறிக்கையால் ஏற்பட இருக்கும் அழுத்தத்தை சமாளிக்க தயாராகிவிட்டது. மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் உலகில் உள்ள பல தமிழர்கள், தமது சாட்சியங்களை அனுப்பி வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ஐ.நா தனது அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளபோதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்கள் தற்போது பிரயோகிப்படவில்லை.
இதில் நாம் காலம் தாழ்த்தினால், இலங்கையின் ராஜதந்திர முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்பு உள்ளது. சிங்களம் எப்படி எதிர்கட்சி ஆளும் கட்சி என்று பாராமல் ஓரணியில் திரள்கிறதோ, அதேபோல தமிழர் அமைப்புகள், பேரவைகள், நிறுவனங்கள், ஒன்றியங்கள் என்று தள்ளி நிற்காமல், அனைத்து வளங்களையும் பயன்படுத்தி போராட்டங்களை அறிவிக்கவேண்டும். ஐ.நா அலுவலகங்கள் முற்றுகையிடப்படவேண்டும். ஜனநாயக வழியில் இப் போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஐ.நாவுக்கு மேலும் அழுத்தங்களை எம்மால் பிரயோகிக்க முடியும். அதனூடான் இலங்கை அரசை அடிபணியவைப்பதோடு, போற்குற்ற மற்றும் இன அழிப்புக்கான தண்டனைகளையும் பெற்றுக்கொடுக்கமுடியும். இன அழிப்பு நிகழ்ந்ததாக நிரூபிக்கப்பட்டால் பிரிந்துசெல்லும் உரிமை தானாகவே கிடைக்கும் என்பது யாவரும் அறிந்ததே !

கொலைவெறி சிங்களம் போராட்டம் நடத்தும் அதே திகதியில் உலகத்தமிழர் ஒன்றிணைந்து ஐ.நா வின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். எமது எதிர்ப்பினை எந்த வகையிலாவது உலகிற்கு அறிவிக்கப்பட வேண்டும். சிங்களம் இன்று நேற்றல்ல காலகாலமாக ஒன்றினைந்தே எம்மை அழித்து வந்துள்ளது. கடந்த நாட்களில் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய வாக்கெடுப்பில் கொலைவெறியனுக்கு எதிராக எத்தனை தமிழர்கள் வாக்களித்தார்கள்? வெளிநாடுகளில் பத்து இலட்சத்திற்கு மேலாக தமிழர் உள்ளனர். அதில் அரைப்பங்கு தமிழர் இணையத்தளங்களுடனும் கணனியுடனும் உறவாடுபவர்கள். ஆனால் எத்தனை தமிழர் அங்கு சென்று எதிராய் வாக்களித்தனர்? தமிழர் இன்னமும் ஒன்றுசேர விரும்பவில்லையா? போராடி களைத்து விட்டனரா?
ReplyDelete