இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தமிழ்நாட்டு தமிழீழ உணர்வாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்திலுள்ள சீகம்பட்டி பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது உணர்வாளர் கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியியலாளர் ஒருவரே அவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ஈழத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின் அவர் தன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தீமூட்டிக் கொண்டு வீதி வழியாக ஓடிச் சென்ற போது அவரது பெற்றோர் பின்னாலேயே ஒடிச் சென்று தீயை அணைக்க முயன்றுள்ளனர். முடியாமற் போன பின்பு தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.
ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.
நெஞ்சைப்பிழக்கும் இந்த கொடியசோகத்தினால் உலகத்தமிழினம் ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கிறது.எமது இனத்தின் துன்பச்சுமை கண்டு தீயில் சங்கமாகிய சகோதரன் கிருஸ்ணமூர்த்தியின் கொடிய சோகத்தினால் நோர்வே வாழ் தமிழ்மக்களும் ஆறாத்துயரில் மூழ்கிப்போயுள்ளனர்.
சிங்களபேரினவாதத்தின் கொலைவெறித்தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளை இழந்திருக்கிறோம் இந்த இழப்புகளின் சோகத்தில் இருந்து மீழ முடியாமல் இருக்கின்றோம் என்பது உண்மை அதர்க்காக அனைவரும் ஒன்றிணைந்து இழந்த மக்களின் நீதிக்காக போராடுவோம் மாறாக மனமுடைந்து மீண்டும் மீண்டும் எம்மத்தியில் இழப்பை ஏற்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அன்போடு வேண்டிநிக்கிறோம் அதேவேளை தமிழ் இனத்துக்காக தீயில் சங்கமமாகிய சகோதரன் கிருஸ்ணமூர்த்திக்கு தமிழீழ மக்களின் சார்பில் வீரவணக்கத்தை செலுத்துவதோடு அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு(நோர்வே)

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.