Wednesday, April 20, 2011

யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

யாழில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறைச் சம்மவங்கள் கடந்த வருடத்தை விட மேலும் இவ்வருடம் பல மடங்கு அதிகரித்திருப்பதாக யாழ்.பெண்கள் சமூக அபிவிருத்தி நிறுவனம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழில் பாடசாலைப் பெண்பிள்ளைகள் பின்தங்கிய கிராமங்களில் மிகவும் துன்புறுத்தல்களுகக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை யாழில் பின்தங்கிய கிராமங்களில் மீண்டும் தலைதுக்கியுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொறாமைமிக்க ஆண்வர்கங்களினால் பின்தங்கிய கிராமப்புற பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆண்வர்கத்திற்கு எதிராக போராடும் குணங்களை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் அத்தோடு பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக சட்டத்தை நாடி தங்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாடசாலைகளில் பெண்பிள்ளைகள் பின்தங்கிய கிராமங்களில் மிகவும் துன்புறுத்தல்களுகக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.