இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான சர்ச்சை குறித்து இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து சுற்றுலாவ பயிற்சிகளுக்காக மே 5 ஆம் திகதிக்கு முன் திரும்பிவர வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு உத்தரவிடுமாறு இலங்கை கிரிக்கெட் சபையை தான் அறிவுறுத்தியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி மே 10 ஆம் திகதி இங்கிலாந்துக்குப் புறப்படவுள்ளது. ஆனால் ஐ.பி.எல். போட்டிகள் மே 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபையுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என இந்திய கிரிக்கெட் சபை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
'ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் எமக்கு நல்லறவு உள்ளது. நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம்' என அந்த அதிகாரி கூறினார்.ஐ.பி.எல். விதிகளின்படி வீரர்கள் போட்டிகளில் பங்குபற்றாவிட்டால் அப்போட்டிகளுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது. ஆனால் பணத்தைவிட இலங்கை வீரர்கள் திரும்பிச் சென்றால் அணியின் சமநிலை பாதிக்கப்படும் என ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இதேவேளை இலங்கை வீரர்கள் சிலர் தாம் மே 10 ஆம் திகதிவரை விளையாடத் தயார் என ஐ.பி.எல். அணி உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக இந்திய 'ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு வீரர் மே 20 ஆம் திகதிவரை விளையாடத் தயார் எனவும் கூறியுள்ளாராம்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.