ஐ.நா.சபையின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டுமாயின் சிறையிலிருந்து சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டுமாயின் அதனை நியாயப்படுத்தும் வகையில் சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் முக்கிய எம்.பி.க்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சில ஆலோசனைகளையும் அவர்கள் தங்களது நிபந்தனைகளாக முன் வைத்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரை பதிலெதுவும் அளிக்காத போதிலும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவோ சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் விடயத்தில் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியத் தயாராக இல்லையென்ற கடும் நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.