இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றம் என்பவை குறித்து ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பங்களாதேஷ் சென்று நாடு திரும்பியதும் எதிர்வரும் 21ம் திகதி கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐ,நா நிபுணர் குழுவின் முழு அறிக்கையையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.நிபுணர்குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.சிறிலங்கா அரசாங்கம் தனக்கு சாதகமான விடயங்களை அந்த பத்திரிகைக்கு வழங்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதற்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்ற வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.