Saturday, April 16, 2011

பல்கலைக்கழக மாணவர் உட்பட்ட இருவர் சடலமாக மீட்பு! யாழில். சம்பவம்!

யாழ். கே.கே.எஸ். வீதி தட்டாதெருவைச் சேர்ந்தவரும் கொழும்புப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டு கற்கும் மாணவனுமான தங்கராசா நிறைஞ்சன் வயது 23 என்பவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உறவினர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் குறித்த மாணவன் கொழும்புப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றபோது ஏனையவர்களுடன் உறவு பேணுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ளுவதாகத் தெரிவித்தார் எனத் தெரிவித்தனர். இன்று காலை யாழ் நகரிலுள்ள கோவிலுக்கு தேர்த் திருவிழாவிற்கு பெற்றோருடன் செல்ல முற்பட்டபோதும் பின்னர் கோயிலுக்குச் செல்லாதுவீட்டில் தனியே நின்றுள்ளார். பெற்றோர் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக சிறுப்பிட்டி கிழக்கு சிறுப்பிட்டியைச் சேர்ந்த ம. கண்ணன் வயது 44 என்ற குடும்பஸ்தர் தூங்கிய நிலையில்; பொலிசாரால் சடலமாக மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

குடாநாட்டில் தற்கொலை செய்பவர்களின் தொகை இவ் வருடம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு 24 மணித்தியாலம் முடிவடையும் நிலையில் இரண்டு தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.