2009 இல் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவ்தினரால் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் தப்பிச் சென்ற பொதுமக்களை விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனவும் புலிகளிடம் இருந்த பாதுகாப்பாக பொதுமக்களை மீட்டது இலங்கை இராணுவம் எனவும் அரசபடைகளால் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனவும் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போரை நடத்தும் கொள்கை அரசாங்கத்தினால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது விடுதலைப்புலிகளால் கடைப்பிடிக்கப்படவில்லை. ஆதலால் தான் இறுதிப்போரின் போது ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தும் காயப்பட்டும் உள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் இலங்கை உள் விவகாரங்களில் அதிகமாகத் தலையிடுகிறார் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என முரளிதரன் கூறியுள்ளார்.
செஞ்சோற்றுக் கடன் தீர்க்கின்றான் இந்த ஈனத் தமிழன். இவனது கொள்ளையடிப்புகள் கொலைகளையும் சர்வதேசம் விசாரிக்க வேண்டும். சிங்கள இன வெறி அரசின் கூலிக்கு மாரடிக்கும் இவன் செயல் அருவருக்கத் தக்கது. தன் இனத்தை காட்டிக் கொடுத்ததும் கொலைகள் புரிந்ததும் அல்லாது இன்று உண்மைகளை மறைக்கப்பார்க்கின்றான்.
ReplyDelete