தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு சர்வதேச சுயாதீன ஆணைக்குழு ஒன்று விசாரணை நடத்தவேண்டும் எனவும் சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பட்ட இன்னல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் முதன்மை ஊடகமாக சனல் 4 தொலைக்காட்சி விளங்குகிறது. இதற்கு தமிழர்கள் அனைவரும் என்றுமே நன்றிக்கடன் பட்டவர்களா இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
சேர்பியாவை ஒத்த படுகொலைகள் இலங்கையில் நிகழ்ந்துள்ளதாக கோடன் வைஸ் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சியில் இன்று நடைபெற்ற செய்திநேரத்தில் மேற்படி கருத்துக்களை முன்வைத்துள்ளார் இலங்கைக்கான முன்நாள் ஐ.நா பேச்சாளர். பொஸ்னியாவில் சேர்பியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது போல இலங்கையிலும், இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வகை தொகை இன்றி கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள கோடன் வைஸ், அப் பகுதியில் நடைபெறும் கொலைகளை யாரும் பார்க்கக்கூடாது என இலங்கை அரசு முன்னரே திட்டமிட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
லிப்பியா மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஐ.நா ஏன் இலங்கையில் போர் நடைபெற்றவேளை அதனைப் பாராமுகமாக இருந்தது எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த கோடன் வைஸ் , சீனாவும் இந்தியாவும் சேர்ந்து இலங்கையைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்ததற்கு சீனாவும், இந்தியாவும் பதில் கூறவேண்டி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் ரஜபட்க்ஷ குடும்பத்தினரே போர் குற்றவாளிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐ.நா வின் அறிக்கை வெளியான நாள் தொடக்கம், தனது செய்தி நேரங்களில் எல்லாம் இலங்கையில் இறந்த மக்களைக் குறித்து மேற்குலக மக்களுக்கு தெளிவுபடுத்திவரும் சனல் 4 தொலைக்காட்சிக்கு அனைத்துத் தமிழர்களும் கடமைப்பட்டுள்ளனர்.
சனல் 4 தொலைக்காட்சி தற்போது கொடுத்துவரும் அழுத்தம் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் அறியப்படுகிறது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.