மலரும் புத்தாண்டில் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வோம் பண்டைய காலம் முதல் இலங்கையின் பெரும்பான்மையான மக்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு ஒரு மிகப்பெரும் கலாசாரப் பண்டிகையாகும்.
இப்பண்டிகை பூவுலகிற்கும் மக்களுக்கும் சக்தியை வழங்கும் சூரியனை வழிபடுவதற்கான ஒரு பெருநாள் என்பதோடு, நாட்டின் கிராமிய மக்களின் விவசாயப் பொருளாதார அடைவுகளுக்கு மேலும் வளம் சேர்க்கும் ஒரு வருடாந்த பெருவிழாவாகும்.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விவசாயத்துறை உட்பட ஏனைய எல்லா துறைகளிலும் உற்பத்தி துரித வளர்ச்சி கண்டுவரும் ஒரு காலகட்டத்திலேயே நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம்.
மேலும் எல்லா மக்களும் எமது தாய்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் நன்மைகளை அனுபவிக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம். எனவே, இப்புத்தாண்டு எமது மக்களிடம் எதிர்கால முன்னேற்றம் குறித்த புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுவர உதவும்.
பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இப்புத்தாண்டின் பாரம்பரியங்கள் இக் கொண்டாட்டத்திற்கு மேலும் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் சேர்ப்பதாகவுள்ளது.
எமது வாழ்க்கை ஒழுங்கில் இப்பெருநாளின் முக்கியத் துவத்தை எமது பிள்ளைகளுக்கும் உணர்த்துவதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினரான அவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியை வழங்க முடியும்.
இப்புத்தாண்டோடு தொடர்புடைய பல்வேறு சமயச் சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களில் எமது பிள்ளைகள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவே இப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எமது பிள்ளைகளின் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் பண்டிகைக் காலங்களில் சகல வகையான மதுபானங்களிலிருந்தும் தூரவிலகியிருக்குமாறு நான் உங்கள் எல்லோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இது இப்பெருநாள் தினத்தின் மகிழ்ச்சியை எமது நாட்டின் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் முழுமையாகக் கிடைக்கச் செய்வதில் பெரும் பங்களிக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.
நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக புதுவருட காலத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கின்ற முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.