இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோக்களை சனல் � 4 வெளியிட்டு வருவதை லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சனல்-4 இன் விடியோ உட்பட செய்தி அறிக்கையானது ஆதாரமற்ற வெறும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டது. இச் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் வெளிப்படைத்தன்மையற்றவை உறுதிப்படுத்த முடியாதவை என கொதித்தெழுந்து மறுத்துள்ளது.
முன்னர் பல சந்தர்ப்பங்களில் சனல்-4 ஒளிபரப்பியதைப் போன்று பொதுப்படையான வதந்திகளை உள்ளடக்கிய மற்றொரு விடியோவையே சமீபத்தில் சனல் � 4 வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் மீது கொடூரமாகக் குற்றம் சுமத்துவதற்காக மேற்கள்ளப்பட்ட பொய்ப்பிரசாரமே இதுவாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான நேற்றுமுன்தினம் சனல் � 4 வெளியிட்டிருந்த வீடியோ செய்தித் தொகுப்பில் கூறப்பட்டிருப்பதாவது, யுத்தம் முடிவடைந்த பின்னரும், இந்தப் பகுதிக்கு வெளியார் மற்றும் ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது. அந்தப் பிரதேசம் முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வருகின்றார்கள். இந்தப் பிரதேசத்திற்கு எமது சுதந்திரமான தொடர்பாளர்கள் தமது உயிரைப் பணயம்வைத்து இந்தக் காட்சிகளைப் படமாக்கியுள்ளார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களில் வாழ்வதையும், அங்கு திட்டமிட்ட வகையில் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையையும், பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளதையும் உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.
இறுதி யுத்தத்தின் போது யுத்தப் பிரதேசத்தில் இருந்த மக்களில் ஒரு லட்சம் பேருக்கு என்ன நடந்தது என்பது காட்டப்படவில்லை. இதற்கு ஆதாரமிக்க சான்றுகள் கிடைத்துள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கில் யுத்தப் பிரதேசத்தில் 4லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் வசித்தனர் என அரச புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இறுதிச் சண்டையின் கடைசி சில மாதங்களில் யுத்தப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்த மோசமான நிலைமைகளின்போது 2 லட்சத்து 90 ஆயிரம் பொதுமக்கள் மட்டுமே இடம் பெயர்ந்து அரசால் அமைக்கப்பட்டிருந்த முகாம்களை நாடிச் சென்றனர் என ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மிகுதியான ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எங்கு சென்றார்கள், என்னவானார்கள் என்பது தெரியவில்லை என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.