அரசாங்கத்திற்கு எதிரான வகையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சிலர் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும், இவ்வாறு போலியான தகவல்களை வழங்கியவர்களில் ஐந்து தமிழ் அரசியல்வாதிகளும் காணப்படுவதாகவும் திவயின ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக சில அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தகவல்களை வழங்கியள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்ட 1680 ஆவணங்களில் 112 ஆவணங்கள் தொடர்பான தகவல்களை வழங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஓர் ஆவணத்தில் அமைச்சரவை போர்க் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு போலியான தகவல்களை வழங்கியவர்களில் ஐந்து தமிழ் அரசியல்வாதிகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்த அரசியல்வாதிகள் இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் இடம்பெற்றதாகத் தெரிவித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
60 முதல் 75 வரையிலான நபர்கள் இலங்கைக்கு எதிரான பொய்த் தகவல்களை இராஜதந்திரிகளுக்கு வழங்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இந்தத் தகவல்கள் வெளியாவதற்கு முன்னர் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் நோர்வேக்குச் சென்று புலி ஆதரவாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.