Saturday, December 04, 2010

பிரித்தானிய பயணம் ஜனாதிபதிக்கு தோல்வி! பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வெற்றி!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய பயணம் தோல்வியில் நிறைவடைந்திருந்தாலும், அவருடன் பாதுகாப்புக்காக சென்ற அதிகாரிகளுக்கு அது வெற்றிகரமாக அமைந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச அதிபர் பல்வேறு சிக்கல்களின் பின்னர் நேற்று மாலை நாடு திரும்பியதன் பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து அதிக அளவிலான சுகபோக பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

அவர்கள் சுங்க சட்டதிட்டங்களை மீறி தீர்வையற்ற இந்த பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக, விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுங்க அதிகாரிகளையும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி நாடு திரும்பிய சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ஏனைய அமைச்சர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

எனினும் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் இவ்வாறு சட்டத்தை மீறி பொருட்களை கொள்வனவு செய்து விமான நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.