Saturday, December 25, 2010

சிங்கள மாணவர்களுக்கு யாழ் படைமுகாமில் உணவு

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்டுள்ள தென்னிலங்கை சிங்கள மாணவர்களுக்கு தேவையான உணவு விநியோகங்களை யாழ் நகரப்பகுதி இராணுவ முகாமே வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது தொகுதி சிங்கள மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். ஆனால் தமிழ் மாணவர்களுடன் நெருங்கிப் பழகவிரும்பாத சிங்கள மாணவர்கள் தமது உணவுத் தேவைகளை படை முகாமில் போக்கி வருகின்றனர்.

சிறீலங்கா இராணுவத்தினரும் அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.