ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன இன்று பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் ஒட்டுமொத்த சண்டித்தனத்துக்கு முகம் நோ்ந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குக் காரணம் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன தான் என்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன புதுக் கண்டுபிடிப்பொன்றை அவிழ்த்து விட்டவுடன், ஒட்டு மொத்த ஆளுங்கட்சியும் ஜயலத்தைத் துவம்சம் செய்யப் பாய்ந்து வந்தது.
பாராளுமன்றத்தில் உண்டான பெரும் அமளியை கடும் பிரயாசைப்பட்டு அடக்க முயற்சித்த சபாநாயகர், நிலைமை கை மீறிச் செல்வதை உணர்ந்து உடனடியாக பத்து நிமிடங்களுக்கு சபையை ஒத்தி வைத்தார்.
அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவே லண்டனிலுள்ள புலி ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு, ஜனாதிபதியின் பயணத்தின் போது பிரச்சினைகளை ஏற்படுத்த வைத்ததாக ஆளுங்கட்சியினர் ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டினர்.
ஆனால் தான் ஜனாதிபதியின் பயணத்தின் போது லண்டனில் இருக்கவில்லை என்று ஜயலத் ஜயவர்த்தன சுட்டிக் காட்டியதை ஆளுந்தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆளாளுக்கு முந்திக் கொண்டு தத்தம் இருக்கைகளில் இருந்து எழுந்து ஜயலத்தை நோக்கி ஓடிவந்தனர். கொஞ்சம் விட்டால் அவர் துவம்சம் செய்யப்பட்டிருப்பார்.அனுர யாப்பா, ஜகத் புஷ்பகுமார, தினேஷ் குணவர்த்தன ஆகியோரே இன்று மோ்வினைத் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு சண்டியர்களாகி விட்டிருந்தனர்.
ஆயினும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓடோடி வந்து ஜயலத்தை சூழ்ந்து கொண்டதால் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முயற்சி பலிக்கவில்லை. அதற்குள் சபையும் ஒத்தி வைக்கப்பட்டு நிலைமையின் தீவிரம் தணிக்கப்பட்டது.
ஜனாதிபதி லண்டனைச் சென்றடைந்த வேளை ஜயலத்தும் அங்கிருந்து நிலைமைகளை சீர்குலைத்ததாக குற்றம் சாட்டியபோதிலும் நவம்பர் 27ம் திகதியே அவர் லண்டனை விட்டு இத்தாலிக்குப் புறப்பட்டு விட்டதாக எமது தகவல்கள் உறுதி செய்கின்றன.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.