சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் (வயது 48) கொழும்பில் இன்று மரணமடைந்துள்ளார்.
மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கட்சியின் பொதுச் செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
48வயதான நூர்தீன் மசூர் கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார்.
2010 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்களின் மிகுந்த நெருக்கடியினை எதிர்கொண்டே அவர் போட்டியிட்டு 9,518 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் அவர்கள் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளன.
இவரது ஜனாஸா இன்று இரவு கொழும்பு 5 ஜாவத்தையிலுள்ள முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.