ஐக்கிய அமெரிக்காவின் 17 செனட் சபை உறுப்பினர்கள் இணைந்து இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ள சுதந்திரமான குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என கோரி, அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கடந்த 25 வருட கால யுத்தத்தில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பை தளமாக கொண்ட ராஜதந்திரிகளை சுட்டிக்காட்டி விக்கி லீக்ஸ் இணையத்தளம் விடுத்துள்ள அறிக்கையை அடுத்தே இந்த கோரிக்கை அவர்களால் முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவரது சகாக்களும், படைத்தரப்பினரும் இலங்கையில் இடம்பெற்ற பாரிய யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யுத்த குற்ற விசாரணை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.