Saturday, December 25, 2010

செத்தாலும் சாவனே தவிர எமது மாவீரர்களுக்கும் அண்ணைக்கும் துரோகம் செய்யமாட்டன் – போராளி தகவல்

என்னை தற்கொலை செய்யச் சொல்லி தினமும் மிரட்டுகிறார்கள். அப்படி தற்கொலை செய்யாவிட்டால் நாங்களே உன்னை சுட்டுக் கொன்றுவிட்டு எம்மை தாக்க முற்பட்டதனால் தற்பாதுகாப்பிற்காக சுட்டுவிட்டோம் என கூறிவிடுவோம் என விசாரணைக்காக வரும் சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவிப்பதாக வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராளி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் 19ம் திகதிக்கு பின்னர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட போராளிகள் பல்வேறு தடுப்பு முகாம்களில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு தொகுதியினர் புனர்வாழ்வு பயிற்சி வழங்குவதற்காக என கூறி வெலிகந்தை காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட முகாமில் வைத்து கொடும் சித்திரவதை செய்துவருகின்றது சிங்கள இராணுவம்.

இவ்வாறு சிங்கள இராணுவத்தின் சித்திரவதையில் சிக்கிய போராளியை பார்வையிட்டு அவருக்கான மாற்று உடுப்புகள் மற்றும் உணவுப்பொருட்களை கொடுக்கச் சென்ற குடும்பத்தவரிடம் அந்தப் போராளி சொல்கிறார்….

இதெல்லாம் எனக்கு இனி எதற்கு… நீங்களே திருப்பி எடுத்துப் போங்கோ… என்னை இவங்கள்(சிங்கள இராணுவம்) கெதியா சுட்டுப்போடுவாங்கள். நான் உயிரோடு இருக்கப்போவது இன்னும் சில நாட்கள்தான் என்டு நினைக்கிறன் எனக்கு ஒன்டும் வேண்டாம்…

என்னை தற்கொலை செய்து சாகும்படி ஒரே கரச்சல் கொடுக்கிறாங்கள். இல்லாட்டி தாங்களே சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று சொல்லுறாங்கள். ஆனால் நான் தற்கொலை செய்யமாட்டன். நான் செத்திட்டன் என்று அறிஞ்சால் ஆமிக்காறங்கள் தான் சுட்டவங்கள் என்று நினையுங்கள்…

முதல்ல பதுக்கிவைத்திருக்கும் ஆயுதங்கள், தங்கம், காசு என்பவை தொடர்பாக தகவல்கள் தந்தால் விட்டுவிடுவோம் என்று தொடர்ச்சியாக கரச்சல்படுத்தி வந்த சிங்களவன் இனி என்னிடம் இருந்து எந்த தகவலும் எடுக்க ஏலாது எண்டு தெரிஞ்சபிறகு இப்படி மிரட்டுகிறான். என்ன சித்திரவதை செய்தாலும் அவங்கட முயற்சி வெற்றிபெறாது. அவன்ர கையாளை செத்தாலும் சாவனே தவிர எமது மாவீரர்களுக்கும் அண்ணைக்கும் (தலைவர்) துரோகம் செய்யமாட்டன். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால் குறித்த போராளியின் குடும்பத்தவர்கள் மிகுந்த மனவேதனையுடன் தவித்துவருகின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.