Sunday, December 05, 2010

ஈழத்தமிழர்களின் ஆழம் பலம் தெரியாமல் பிரபா கணேசன் காலை விட்டிருக்கிறார்: இரா.துரைரத்தினம்

கழுதை தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்க வேணுமே தவிர மற்றவர்களின் வேலையை பார்க்க போனால் தேவையில்லாமல் அடி வாங்க வேண்டி வரும் என்பது தமிழ் மக்கள் மத்தியில் வழக்கத்தில் உள்ள ஒருகதை. இந்த கதைதான் பிரபா கணேசன் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாட்டை நடத்திய போது எனக்கு ஞாபகம் வந்தது.

பிரபா கணேசன் ஒரு ஆளுமை உள்ள அரசியல்வாதி இல்லை. நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். இந்த காளான்களின் கதைகளை கணக்கில் எடுக்க கூடாது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் ஈழத்தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்களின் உரிமைப் போராட்டம் சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர் கைவைத்திருப்பதால் இந்த பிரபா கணேசன் போன்ற காளான்கள் இனிமேல் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தேவையில்லாமல் வாய் திறக்க கூடாது என எச்சரிப்பதற்காக இதை எழுத வேண்டியிருக்கிறது.

பிரபா கணேசன் போன்றவர்களுக்கு மேற்குலக நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் செயற்பாடுகள் பற்றி பேசுவதற்கோ ஆலோசனை சொல்வதற்கோ எந்த அருகதையோ உரிமையோ இல்லை என்பதை முதலில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தேவையில்லாத வேலையை யாராவது செய்தால் தான் போக வழிதெரியாத மூஞ்சுறு விளக்குமாத்தையும் தூக்கி கொண்டு போச்சுதாம் என என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வதை கேட்டிருக்கிறேன். பாவம் இந்த பிரபா கணேசன் என்ற மூஞ்சுறு தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்க தெரியாமல் ஈழத்தமிழர்களின் விடயத்தில் மூக்கை நுழைத்திருக்கிறது.

ஈழத்தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தின் இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கி வாய்திறக்க முடியாத நிலையில் இருக்கும் போது அவர்களுக்காக பேசக்கூடிய சக்தியாக இருப்பது மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள்தான்.

ஈழத்தமிழினத்தை மிகப்பெரிய அளவில் கொன்று குவித்து போர் குற்றம் புரிந்த மகிந்த ராசபக்சவையும் அவரது சகாக்களையும் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதிலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதிலும் இன்று சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அதனை சரியாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களிடம் இருக்கிறது. அதைத்தான் இன்று மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் செய்ய விளைந்திருக்கிறார்கள்.

இதைப்பார்த்து பிரபா கணேசன் போன்றவர்கள் முட்டாள்தனமான வேலை என சொல்லியிருக்கிறார்கள். பிரபா கணேசன் முட்டாளா ஈழத்தமிழர்கள் முட்டாள்களா என்பது அரசியல் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ் இனத்தை கொன்று குவித்த மகிந்தவின் முதுகில் உள்ள ஊத்தையை பிரபா கணேசன் போன்றவர்கள் நக்க விரும்பினால் அதை செய்து கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. ஆனால் எங்கள் விடயத்தில் எங்களின் உரிமைப்போராட்ட விடயத்தில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்றே எச்சரிக்க விரும்புகிறேன்.

பிரித்தானியாவில் ஒரு சில தமிழர்களால் தங்களது மகாராசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அதனை தானும் தன்னோடு சேர்ந்த மற்றொரு தும்புக்கட்டையான திகாம்பரமும் கண்டிப்பதாக பிரபா கணேசன் சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் எங்களது உறவுகளை கொன்று குவித்து விட்டு எமது இனத்தை இராணுவ அடக்குமுறைக்குள் அடிமைகளாக வைத்திருக்கும் மகிந்த என்ற அரங்கனுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் செங்கம்பள வரவேற்பு வழங்க வேண்டும் என்றா இந்த கேடுகெட்ட பிரபா கணேசன் போன்றவர்கள் விரும்புகிறார்கள்? பிரபா கணேசன் போன்றவர்களுக்கு தன்மானம் ரோசம் எதுவும் இல்லாமல் அடிமைத்தனமே அவர்களை குடிகொண்டிருக்கலாம்.

அதற்காக ஈழத்தமிழர்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என பிரபா கணேசன் பரம்பரையினர் நினைப்பதுதான் ஈழத்தமிழர்களை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது.

பிரித்தானியாவில் மூக்குடைபட்ட போர்க்குற்றவாளியான மகிந்த தனது கொல்லைக்குள் ஓடிச்சென்றதும் திருப்பி குலைக்க ஆரம்பித்திருக்கிறார். தனக்கு ஆதரவாக பிரபா கணேசன் போன்ற காளான்களை பயன்படுத்தியிருக்கிறார்.

மகிந்த வீசிய எச்சில் இலையை நக்கிய நன்றிக்கடனுக்காக இவர்கள் இதை செய்கிறார்கள் என கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டால் தொடர்ந்து இதை செய்ய முற்படுவார்கள். இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது ரோசம் மானம் உள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

பிரித்தானியாவில் ஒரு சில தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஈழத்தமிழர்களை அவர் குறைவாக மதிப்பிட முற்பட்டிருக்கிறார். எமது உறவுகளை கொன்று குவித்த அரக்கனுக்கு எதிராக ஒரு சிலர் அல்ல முழு ஈழத்தமிழினமும் ஒன்று பட்டு நிற்கிறது என்பது தெரியாவிட்டால் மகிந்தவின் கொல்லையை விட்டு வெளியில் வந்தால் ஈழத்தமிழர்கள் தாங்கள் யார் என்பதை இந்த பிரபா கணேசன் பரம்பரைக்கு உணர்த்திக்காட்டுவார்கள்.

இனிமேல் மகிந்த மட்டுமல்ல மகிந்தவுக்காக வக்காலத்து வாங்கும் கணேசன் பரம்பரைகளும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு வரமுடியாது. அவர் வந்தால் மகிந்தவுக்கு எதிராக ஒருசிலர்தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என சொன்ன பிரபா கணேசனுக்கு தங்கள் பலத்தை ஈழத்தமிழர்கள் காட்டுவார்கள்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தங்களுக்குள் நூல்இடைவெளி உள்ள சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொது எதிரியான மகிந்த என்ற சிங்கள பேரினவாதிகள் எமது இனத்திற்கு செய்த கொடுமைகளுக்கு பழிவாங்க வேண்டும் என்பதிலும் ஈழத்தமிழினத்தின் உரிமைகளை சிங்கள பேரினவாதிகளிடம் மண்டியிட்டு பெற முடியாது போராடித்தான் பெற வேண்டும் என்பதிலும் உறுதியாகவும் ஒத்தகருத்திலும்தான் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

பிரபா கணேசன் போன்ற மகிந்தவின் எச்சில் இலைக்காக ஏங்கும் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். மகிந்தவையும் அவனது சகாக்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அனைத்து ஈழத்தமிழ் மக்களும் ஒன்றுமையோடுதான் இருக்கிறார்கள். இதை முதலில் இந்த காளான் பிரபா கணேசனும் மகிந்தவின் காலடியில் கிடக்கும் இவனைப் போன்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இராணுவ அடக்கு முறைக்குள் இருக்கும் வடகிழக்கு மக்களை துப்பாக்கி முனையில் கொண்டு சென்று ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மட்டும் தான் செய்ய முடியும். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் துப்பாக்கி முனையில் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களை மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்திருக்கிறார்கள். இது மகிந்த பரம்பரையின் கோழைத்தனம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.

மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் தாயகத்தில் இருக்கும் மக்களின் விடுதலைக்காக உரிமையை மீட்பதற்காக நடத்தும் போராட்டங்களுக்கு இராணுவ அடக்குமுறைக்குள் இருக்கும் தமிழ் மக்களால் வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்க முடியாவிட்டாலும் மனதார தங்களின் ஆதரவை தெரிவித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் கூட சிங்கள பேரினவாதிகளுக்கு பின்னால் போவதற்கோ மண்டியிடுவதற்கோ தயார் இல்லை என்பதுதான் யதார்த்தம். இதை அவர்களால் வெளிப்படையாக சொல்லமுடியாமல் இருக்கிறது. இராணுவ அடக்கு முறைக்குள் வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்பதற்காக பிரபா கணேசன் போன்றவர்களைப்போல எச்சில் இலைகளுக்காக மகிந்தவிற்கு பின்னால் தாங்கள் போகத்தயார் இல்லை என்பதை பல தடவைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரபா கணேசன் போன்று மகிந்த தூக்கி வீசும் எலும்புத்துண்டுகளுக்காக நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு இருப்பவர்களாக வடகிழக்கில் உள்ள ஈழத்தமிழர்களை எண்ணினால் அது அவர்களின் மடைத்தனமாகத்தான் இருக்க முடியும்.

தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக செயற்பட கூடாது என்றும் மண்டியிட்டு சரணாகதி அரசியலை நடத்த வேண்டும் என்றும் பிரபா கணேசன் சொல்லியிருக்கிறார்.
சிங்கள பேரினவாத அரசிடம் சரணாகதி அரசியலை பிரபா கணேசன் மட்டுமல்ல வடகிழக்கில் உள்ள பெரும்பான்மையான தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்ய கூடாது என்பதுதான் ஈழத்தமிழர்களின் கட்டளையாகும். அவ்வாறு சரணாகதி அரசியல் செய்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்பை மட்டுமல்ல எந்த கொம்பனை கூட வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அவர்களை தூக்கி எறிய தயங்கமாட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

எதிரியிடம் பேசுவது தவறில்லை. ஆனால் சரணாகதி நிலையில் எதிரியின் காலடியில் விழுந்து கிடந்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் கைகட்டி நிற்பதுதான் தவறு. இதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு போன்ற தமிழ் அரசியல் தலைமைகள் உணர்ந்து எந்த விடயங்களிலும் விட்டுக்கொடுப்புக்களோ சரணாகதி நிலைகளுக்கோ செல்லாது தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக செயற்பட வேண்டும். அதற்கான ஆணையைத்தான் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் தலைமைகளுக்கு தமிழ் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நொந்து நூலாக போயிருக்கலாம். அதற்காக அவர்கள் சலுகைகளுக்கு பின்னால் செல்பவர்கள் அல்ல என்பதை கடந்த தேர்தலில் உணர்த்தியிருக்கிறார்கள். சலுகை அரசியல் என்பதை ஈழத்தமிழர்கள் இன்று நேற்றல்ல. அவர்கள் சுதந்திரத்தை இழந்த காலத்திலிருந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

எனவே இந்த சலுகை அரசியலுக்கு பின்னால் செல்லுங்கள் என பிரபா கணேசன் போன்றவர்கள் சொன்னாலும் அதை மானம் ரோசம் உள்ள எந்த தமிழனும் கேட்க தயாராக இல்லை ( டக்ளஸ் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடியதுகள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். )

தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்கள் இப்போது தமிழ் மக்களை சகோதர மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள் என இந்த பிரபா கணேசன் சொல்லியிருக்கிறார். இதை நம்புவதற்கு டக்ளசைப்போன்ற பச்சோந்திகளாக ஈழத்தமிழர்களை நினைக்க கூடாது.

இறுதியாக பிரபா கணேசன் போன்றவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மகிந்த என்ற போர்க்குற்றவாளியையும் அவனது சகாக்களுக்கும் தண்டனை பெற்றுக்கொடுத்து

ஈழத்தமிழினம் விடுதலை பெற்ற இனமாக வாழ்வதற்கான வழி ஏற்படுத்தும் வரை மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் போராட்டம் ஓயப்போதில்லை. அது இன்னும் பலம்பெற்று மேலெழும். பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதில் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் ஒன்றுபட்டுத்தான் நிற்கும்.

இதை உணர்ந்து கொண்டு பிரபா கணேசன் பரம்பரையினர் இனிமேலாவது வாயைப்பொத்திக்கொண்டு ஈழத்தமிழர்களின் விடயத்தில் முக்கியமாக மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் செயல்பாடுகளில் தலையிடாது மகிந்த வீசும் எச்சில் இலைகளை பொறுக்கும் வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது.

( குறிப்பு இந்த கட்டுரையில் வார்த்தைப்பிரயோகங்கள் மிகக்கடுமையாக இருப்பதற்காக வாசகர்கள் மன்னிக்க வேண்டும். தமிழ் இனத்தை விற்றுப்பிழைக்கும் ஈனப்பிறவிகளை என்னால் இப்படித்தான் நோக்க முடிகிறது.)

thurair@hotmail.com

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.