இறுதிக்கட்டப் போரில் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நேற்று அமெரிக்கா மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.நம்பகத்தன்மை வாய்ந்த சுயாதீன விசாரணைகளின் அவசியம் குறித்து அமெரிக்க அரசாங்கம் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுக்கு போர்க்குற்றங்களில் தொடர்பிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புடெனிஸ் இராஜாங்கத் திணைக்களத்துக்கு இவ்வருட ஜனவரியில் அனுப்பியிருந்த இரகசிய அறிக்கை அண்மையில் விக்கிலீக்ஸ் இணையத்தில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னணியிலேயே அதனை உறுதிப்படுத்துவது போன்று அமெரிக்க அரசாங்கத்தின் நேற்றைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான அமெரிக்க அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாக பல தடவைகள் அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
அதற்கேற்ப இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமானதும், நம்பகமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பற்றீசியா குறித்த அறிக்கையை நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.