Saturday, November 20, 2010

கொங்கோ குடியரசு மீதான விசாரணையை ஒத்த நடவடிக்கையை தமிழர்கள் ஐ.நாவிடம் கோரமுடியும்:- பேராசிரியர் பொய்ல்ட்.

கொங்கோ குடியரசில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை 550 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில் படுகொலைகள், பாலியல் வன்முறைகள், அழிவுகள் உட்பட பல வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஆனால் அவை தற்போதும் தொடர்வதாகவும் அமெரிக்காவை தளமாக கொண்ட அனைத்துலக விதிகளுக்கான அமெரிக்க சபை தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை ஒத்த ஒரு போர்க்குற்ற விசாரணையை சிறீலங்கா அரசு மீது கொண்டுவருமாறு உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என அமெரிக்காவின் இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக விதிகளுக்கான பேராசிரியர் பொய்ல்ட் தெரிவித்துள்ளார்.

கொங்கோ குடியரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகள் 2008 ஆம் ஆண்டு, கனடாவை சேர்ந்த சட்டவியல் நிபுணர் லூக் கோட் தலைமையில் ஆரம்பமாகியிருந்தது. இந்த விசாரணைகளின் போது 1,280 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். 1,500 இற்கு மேற்பட்ட ஆவணங்களும் சேகரிக்கப்பட்டன.

இந்த அறிக்கை கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அதன் இறுதி அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் பூர்த்தியாக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஊடகங்கள் விரைவாக வெளியிட்டதை தொடர்ந்து கடந்த மாதம் அது வெளியிடப்பட்டது.

இதனிடையே, சிறீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரில் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிறீலங்கா அரசு மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகள் கொங்கோவில் நடைபெற்றதற்கு இணையானது அல்லது அதனை விட அதிகமானது. எனவே சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணைகளை கோருவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளது என அமெரிக்காவை தளமாக கொண்ட இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.