Monday, November 22, 2010

பிரகாஷ் எம்.சுவாமிக்கு அமெரிக்காவில் அதிரடி வைத்தியம் !

இந்திய அமெரிக்க பத்திரிகையாளரான டாக்டர் பிரகாஷ் எம்.சுவாமி அமெரிக்காவில் நியூஜோ்சியில் இடம்பெற்ற புலிகளுக்குச் சார்பான கூட்டமொன்றிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை நேற்று தெரிவித்துள்ளது.

இந்திய அரசினதும் இலங்கையினதும் முகவர் என்று அவரைக் குறிப்பிட்டுள்ள கூட்ட ஏற்பாட்டாளர்கள் கூட்டத்திலிருந்தும் அவரை வெளியேற்றியுள்ளனர்.

நியூயோர்க்கிலுள்ள சிரேஷ்ட செய்தியாளரான பிரகாஷ் சுவாமி ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற நிருபராகும். நியூஜோ்சியில் இடம்பெற்ற கூட்டநிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் அங்கு சென்றிருந்த நிலையில் அவரைப் பலவந்தமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தமிழர் சங்கமும் இலங்கைத் தமிழ் சங்கமும் இந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இந்திய அரசினதும் இலங்கையினதும் முகவர் என்று அவர்கள் அவரை சிந்தித்ததுடன் பலவந்தமாக கதவுக்கு வெளியே தள்ளிவிட்டதாகவும் வெளியே கடும் குளிர் என்றும் அவர்களின் அழைப்பின் பேரிலேயே நியூயோர்க்கிலிருந்து நியூஜோ்சிக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியபோதும் தன்னை வெளியேற்றி விட்டதாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் தலைமையகத்தைக்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டமை தொடர்பாக இந்திய ஊடகங்களில் விசேடமாக யூனியர் விகடன் போன்ற சஞ்சிகைகளில் பிரகாஷ் சுவாமி எழுதியிருந்தார்.

பலவந்தமாக மண்டபத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியே கொண்டு வரப்பட்டு அவரின் அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு கேட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அவர் தனது கடமையை ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொள்வதற்கு தடையேற்படுத்தியதாக நியூஜோ்சி ஆளுநரிடம் முறைப்பாடு தெரிவிக்க திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.