Sunday, November 21, 2010

தமிழர் தேசிய மாவீரர் நாள் 2010 இன்று ஆரம்பமாகிறது,

எங்கள் மண்ணின் விடுதலைக்காய் விதையாகிப் போன இந்த எங்கள் விடுதலை வீரர்கள் கனவுகள் அரியவை, பெரியவை, போற்றத்தக்கவை. அவர்களை நினைந்து அவர்களை கெளரவப்படுத்தி அவர்களின் ஆற்றல்கள், சாதனைகள், தியாகங்கள் என்பவற்றை எம் ஒவ்வொருவருக்குள்ளும் மீட்டுப் பார்த்து தமிழினம் எழுச்சி கொள்ளும் தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது,

சிங்களதேசத்தில் தமிழர்கள் வகைதொகையின்றி அழிக்கப்பட்டனர். உடைமைகள், சொத்துகள் களவாடப்பட்டது. காணாமல் போதல் கைதுகள் என எண்ணற்ற கொடுமைகள் அரங்கேற்றப்பட்டது.

இந்நிலைலேயே எம் தன்னிலை மாறாத் தலைவன் ஈழ விடுதலையை தீவிரமாக்கினார். பல்லாயிரம் சங்கர்களும், மாலதிகளும், மில்லர்களும் ஏன் அங்கயற்கண்ணிகளும் விடுதலை வேள்வியில் ஆகுதியாயினர்.

அழிக்கப்பட்டதாய் சொல்லப்படும் எம் போராட்டம் தமிழீழம் என்ற எம் மாவீரர் கனவுகளால் எட்டப்படும், அவர்கள் துக்கமின்றி உழைத்த கனவுகள் எப்படி வீண் போகலாம்?

வெறும் மாவீரர் எழுர்சியை அனுட்டிப்பதில் பயனில்லை மாவீரர் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறனும் ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எத்தனை துரோகங்களிலும், தடைகளிலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் நாமிருக்கிறோம்.

தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவல்ல என்று உலகமும், சிங்களமும் ஒருநாளில் அறிந்து கொள்ளட்டும்.

தியாகங்களால் எம் மாவீரர்கள் விடுதலை பயணத்தை உச்சத்தில் வைத்தனர். எதையும் முடிக்கும் வல்லமை காட்டினர். தமிழரின் வீரம் பிறப்பிலென்று பறை சாற்றினர். காலங்காலமாய் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை எங்கள் மாவீரர்களே உடைத்து வெற்றி கொண்டனர். தியாகத்தின் எல்லையை தொட்டு நின்றனர்.

"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள்! உயர்ந்தவர்கள்! நானும் உண்மையானவனல்லன்." என தேசிய தலைவர் சொல்லுவார்.

சிறிதாய் சொல்லப்போனால் அந்தந்த வயதில் கிடைக்கவேண்டியதை விடுத்து, அந்த மாவீரர்கள் செய்ததெல்லாம் தமிழரின் விடுதலைக்காகவன்றி வேறெதற்காய்?

அந்த வீரர்களின் தியாகத்துக்காய் இந்த வாரம் நாம் சிந்தும் கண்ணீரே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சிறிய நன்றிக்கடன் என கொள்வீர்.

நம் கோவில்களான கல்லறைகளை உடைத்து விடுவதால் எங்கள் மனங்களின் தொழுகைகளை நிறுத்த முடியாது, ஏழு நாட்டகள் எமக்கு எந்த ஆடம்பர நிகழ்வுகளும் வேண்டாம், சொந்த குருதி வடியும்போது சந்தோசம் வருமா எங்கிருந்தாவது? தமிழராக முன்பு மனிதனாக வேண்டும்.

கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செம்மனச்செல்வங்களை, கார்ர்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும், விதையானவர் தமிழீழம் மலரவென்பதால் இயற்கை வணக்கம் செய்யும்.

"சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதி எடுத்துக்கொள்வோமாக" என்ற தேசிய தலைவரின் கூற்றுக்கிணங்க, வரலாறு தந்த வீரர்களை நினைவுகொள்வோம், அவர் பாதையில் நடந்து இலட்சியம் வெல்வோம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.