Saturday, November 20, 2010

தேசியத் தவைரின் பிறந்ததினத்தில் தமிழ் மக்களுக்கு இந்தியா காணிகளை வழங்குகிறது – அரசை எச்சரிக்கின்றது கொழும்பு ஊடகம்

எதிர்வரும் 26 ஆம் நாள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததினம். அதனை தொடர்ந்து 27 ஆம் நாள் மாவீரர் தினத்தை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் நாள் கொழும்புவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தமிழ் மக்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் வீடுகளை வழங்குகின்றார்.இந்தியாவின் இந்த மாற்றம் ஆபத்தானது என கொழும்பு ஊடகம் சிறீலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது அதனை நிறுத்துவதற்கு அமெரிக்கா கடும் முயற்சியை எடுத்திருந்தது. ஆனால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வை காண்பதற்கு தாம் உத்தரவாதம் தருகின்றோம் என உறுதிமொழிகளை வழங்கிய இந்தியா அமெரிக்காவின் முயற்சிளை தடுத்து நிறுத்திவிட்டது.

இந்த நிலையில் போர் நிறைவுபெற்று ஒன்றரை வருங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்தியா நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதது அமெரிக்காவை விசனமடைய வைத்துள்ளது. இந்தியா தொடர்ந்து மெனமாக இருந்தால் தான் நேரிடையாக தலையிடவேண்டிய நிலை ஏற்படும் என அமெரிக்கா மறைமுக எச்சரிக்கையையும் இந்தியாவுக்கு சில நடவடிக்கைகள் மூலம் விடுத்திருந்தது.

சிறீலங்கா அரசு அண்மையில் கொண்டுவந்த 18 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலும் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, அண்மையில் இந்தியாவுக்கு வருகைதந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அண்டைய நாடுகளில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள், ஜனநாயகவிரோத செயற்பாடுகள், சிறுபான்மை மக்கள் மீதான வன்முறைகளை கண்டிப்பதில் இந்தியா தொடர்ந்து தவறிழைத்து வருவதாகவும், ஒரு மிகப்பெரும் ஜனநாயக நாடு அவ்வாறு இருப்பது அழகில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஓபாமா தனது கருத்தில் நேரிடையாக எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை எனினும், சிறீலங்கா, பர்மா போன்ற நாடுகள் தொடர்பாகவே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக இந்தியா உணர்ந்துள்ளது. மேலும் ஒபாமாவின் கருத்தை முக்கியமாகவும், முதன்மைப்படுத்தவேண்டிய நிலையும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறீலங்காவில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் இந்தியாவுக்கு இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 25 ஆம் நாள் சிறீலங்காவுக்கு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பணயத்தை இந்தியா ஒரு முக்கிய நிகழ்வாக கருதுகின்றது.

மாவீரர் தினத்தில் யாழில் இந்திய தூதரகத்தை திறந்துவைத்து அவர் யாழ் மக்களுக்கு உரையாற்றப்போகின்றார்.
அதன் பின்னர் அவர் அம்பாந்தோட்டையிலும் தூதரகத்தை திறந்து வைப்பதுடன், தமிழ் மக்களுக்கு காணிகளையும் வீடுகளையும் வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது.

இந்தியாவின் இந்த மாற்றத்தை சிறீலங்கா அரசு ஒரு எச்சரிக்கையாக கருதவேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.