Thursday, July 29, 2010

கனேடியத் தமிழர் பேரவை, சர்வதேச மன்னிப்புச் சபை, அகதிகளுக்கான கனேடிய அவை ஆகியன இணைந்து விடுக்கும் வேண்டுகோள்

வட அமெரிக்காவை நோக்கித் தற்போது வந்து கொண்டிருக்கும் ஒரு கப்பலில் இருப்பதாக நம்பப்படுகின்ற தமிழர்களது சர்வதேச மனித உரிமைகள் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய தேவையை நினைவிற் கொள்ளுமாறு கனடாவாழ் தமிழர்களை அகதிகளுக்கான கனேடிய அவை, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் கனேடியத் தமிழர் பேரவை கூட்டாகக் கேட்டுக் கொள்கின்றன.

கடந்த ஆண்டுகளிற் சுதந்திரமான, நியாயமான அகதி விண்ணப்ப முறைமையைப் பயன்படுத்த வசதி செய்து கொடுத்ததன் மூலம் கொடுமையான துன்புறுத்தல்களிலிருந்து தப்பியோடி வந்த தமிழர்கள் பலரது வாழ்க்கையைக் கனடா காப்பாற்றியிருக்கிறது என அகதிகளுக்கான கனேடிய அவையின் தலைவர் வண்டா யமமோட்டோ கூறினார்.

மனித உரிமை மீறலிலிருந்து தப்பியோடி விமானத்திலோ படகிலோ வந்து தஞ்சம் கோரும் மக்களுக்கு அவர்கள் ஏன் தப்பியோடி வந்தார்கள் என்பதற்கான காரணத்தைச் சொல்லி விளக்குவதற்கு ஒரு தனிப்பட்ட ரீதியிலான விசாரணைக்கு உரிமை உண்டு. இந்த உரிமை அண்மையிற் பாராளுமன்றத்தால் மீளவும் உறுதிசெய்யப்பட்டது. இந்த உரிமைக்கு மதிப்புக் கொடுப்பதன் மூலம் நாங்கள் மக்களைக் கொடுமையாகத் துன்புறுத்துபவர்களுக்கெதிராகவும் மனித உரிமைகளை மீறுபவர்களுக் கெதிராகவும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஸ்ரீலங்கா அகதி விண்ணப்பங்களுக்கான தனது கைநூலில் இலங்கையில் கொடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கான ஆபத்தில் இருப்பவர்களில் ஊடகவியலாளர்கள், மனித உரிமைவாதிகள், ஆண் தன்னினச் சேர்க்கையாளர்கள், பெண் தன்னினச் சேர்க்கையாளர்கள், இருபாற் கவர்ச்சியுள்ளவர்கள், பால் மாற்றம் செய்தவர்கள், மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சம்பந்தமுள்ளவர்கள் அடங்குவர் எனக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை வாதிகளையும், ஊடகவியலாளர்களையும் ஏனைய கண்டனவாதிகளையும் அடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதனைச் சர்வதேச மன்னிப்புச் சபை விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் ஒருவர் தமீழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் எனச் சரியாகவோ தவறாகவோ சந்தேகிக்கப்பட்டால், அவர் வழக்கமாகச் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுவார் என சர்வதேச மன்னிப்புச் சபையின் கனேடியக் கிளையின் செயலாளர் நாயகம் அலெக்ஸ் நேவ் கூறினார்.

”தமிழ் அகதிநிலை கோருவோரை அவர்களுக்குத் தங்கள் கதையைச் சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கூடக் கொடுக்காது அவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை வைத்துப் பொது மக்கள் வியாக்கியானம் சொல்வதனைக் கேட்கும் போது, மிகவும் வேதனையாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

கனடாவினதும் சர்வதேசத்தினதும் சட்டங்களின் படி அகதிகளுக்குத் தங்களுக்குத் தேவையான பாதுகாப்புப் பற்றிய தீர்மானம் தனிப்பட்ட, பக்கச் சார்பற்ற முறையில் கிடைக்கப் பெற வேண்டும்.
அத்துடன், கனடியச் சட்டம், ஒருவர் பாரதூரமான மனித உரிமை மீறலை இழைத்திருந்ததாக அல்லது, கனடியச் சமுதாயத்துக்கு இவர் ஒரு ஆபத்தானவராக இருப்பார் என அடையாளம் காணுவதற்கு இடமளிக்கிறது. அப்படியானவர்கள் அகதி நிலை அந்தஸ்துக்குத் தகுதியற்றவர்களாகக் காணப்படுவதற்கும், கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவும் கூடும்.

கடலில் இப்படியான வள்ளத்தில் பிரயாணம் செய்யப் புறப்பட்டது மிகவும் ஆபத்தானது எனக் கனடியத் தமிழர் பேரவையின், தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார். இந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருக்கும் மக்கள் இப்படியான ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முனைந்ததற்கு, அவர்களது நிலைமை அவ்வளவு மோசமானதாக இருந்திருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்க முடியும். எமது சக கனேடியர்கள் அந்த மக்களின் நிலைமையை அனுதாபத்துடன் செவிமடுப்பார்கள் எனவும் கனேடிய அரசு அந்த மக்களின் விண்ணப்பங்களின் மேல் இந்நாட்டுச் சட்டத்தை நியாயத்துடன் பிரயோகிக்கும் எனவும் நாம் எதிர்பார்க்கிறோம்.

தொடர்புகளுக்கு:

கொலீன் ஃபிரஞ்ச் - அகதிகளுக்கான கனடிய அவை 514-277-7223

begin_of_the_skype_highlighting 514-277-7223 end_of_the_skype_highlighting ext.

514—4776-3971 (கைத் தொலைபேசி) Email: cfrench@ccrweb.ca

பெத் பேர்ட்டன்–ஹன்ரர், சர்வதேச மன்னிப்புச் சபை 416-363-9933 x 332

416-904-7156. (கைத் தொலைபேசி)

டேவிட் பூபாலபிள்ளை, கனடியத் தமிழர் பேரவை 416-240-0078

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.