Thursday, July 29, 2010

வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது

வன்னி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிராக அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கே இன்று விசாரணைக்கு வந்தது.

தீபாலி விஜயசுந்தர, டபிள்யூ. டி.எம்.பி.பி. வராவௌ மற்றும் இசெட் ரஸ்மி ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

இதன் போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் சாட்சிகள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதிபதிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை குற்றங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், வீடியோ மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் குற்றங்கள் நிரூபிக்கப்படும் என இன்றைய நீதிமன்ற அமர்வின் போது அரச தரப்பு சட்டத்தரணி சரத் பொன்சேகாவிடம் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.