இலங்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு இன்றைய தினத்திற்குள் கலைக்கப்படாவிட்டால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக வலுவடையுமெனத் தேசிய சுதந்திர முன்னணி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் அதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
'இந்த நாட்டு மக்களை வேட்டையாடுவதற்காக பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட குழு கலைக்கப்படும்வரை நாளையிலிருந்து சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இன்றைய தினத்தினுள் இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். எவ்விதத் தடைகள் வந்தாலும் நாம் அந்தத் தீர்மானத்தைக் கைவிடமாட்டோம். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நாளை இணையவுள்ளார்." என அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.
ஐ.நா கொழும்பு அலுவலக ஊழியரின் நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கப் போவதில்லையென்றும் அவர்கள் வழமைபோல வந்து போகலாமெனவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.