மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றியமைக்கப்படும் போது திமுக சார்பி்ல் கனிமொழி நாடாளுமன்ற அமைச்சராகலாம் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன..தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் மு.க. அழகிரி பதவி விலகலாம் என தெவிக்கப்படுகிறது.
பணிச் சுமையைக் குறைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கோரியுள்ளதால், அவரது துறைக்கு இரு இணையமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
சரத்பவாரிடம் விவசாயத்துறையை மட்டும் விட்டுவிட்டு அவர் வசமுள்ள உணவுத்துறை மற்றும் பொது வழங்கல் துறைக்கு என தனியாக இரு இணையமைச்சர்கள் நியமி்க்கப்படவுள்ளனர். இந்தப் பதவிகளுக்கு பிரதீப் ஜெயின் (காங்கிரஸ்) சிசிர் அதிகாரி (திரிணாமூல் காங்கிரஸ்) ஆகியோரின பெயர்கள் முன்மொழியப்பட்டள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.