Thursday, July 08, 2010

யாழிலுள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீள்குடியமர்வுக்கு ஏற்பாடு!

யாழ். குடாநாட்டில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் சிலவற்றில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தத் தகவலை மீள் குடியேற்ற அமைச்சு நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றம் மேற்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நாடாத்துமாறும் அதற்கான ஆரம்ப வேலைகளைக் கவனிக்குமாறும் அமைச்சு யாழ். அரச அதிபரைப் பணித்துள்ளது.

இந்த விடயமாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கவும், மீள் குடியேற்றத்துக்கான அனுமதியைப் பெறவும் யாழ். அரச அதிபருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் எம்.பி திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை, கோப்பாய், மற்றும் யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தின் மேற்குப் பகுதிகளில் மீள் குடியேற்றங்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டியிருப்பதாகவும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான பேச்சுக்கள் இப்போது நடைபெற்று வருவதாக இரானுவத்தரப்புப் பேச்சாளர் பிரிகேடியர் உதய மடவல தெரிவித்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களைக் குடியேற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அனால் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை பற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.