ஜனநாயக நாடு என்ற முறையில் மக்களுக்கு தமது கருத்துக்களைச் சொல்வதற்கும் குறித்த ஒரு விடயத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் உரிமை உள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வன்முறையற்ற விதத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஐ.நா சபை கட்டடத்திற்கு முன்னால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு வெளியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறித்த விடயம் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதே வேளை சர்வதேச வரைமுறைகளுக்கேற்ற வகையில் ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் தமது பணியைத் தொடர்ந்து நடத்துவதற்கும் அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கிப்பட்டுள்ளது.









0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.