நேற்று திங்கட்கிழமை ஜூலை 5, கரும்புலிகள் நாள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 1986 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதியில் நெல்லியடியில் முதன் முதல் கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டவர் கரும்புலி மில்லர். அந்தத் தினமே கரும்புலி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜூலை 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு சென்ற இராணுவத்தினர், மில்லரின் நினைவுச்சிலையை முற்றுமுழுதாக அழித்துள்ளனர். கரும்புலி நாளை குடாநாட்டு மக்கள் நினைவுகூரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை இராணுவத்தினர் இவ்வாறு அச்சிலையை முற்றுமுழுதாக அழித்துள்ளமையை அறிந்துள்ள அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.