தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் வேண்டுகோளை ஏற்று கன்னட, ஆந்திரா, மலையாளத் திரையுலகினர் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இம்மாதம் 4ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து, இந்திய திரையுலக நடிகர்கள் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் தமிழின உணர்வாளர்களால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் வீடுகளில் முற்றுகைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், இத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் நடிகர்களின் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படுவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவித்திருந்தது.
இத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதில்லை என தமிழக முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததோடு, மணிரத்னம், அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் கொழும்பு படவிழாவை புறக்கணித்திருந்தனர்.
இந் நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் வேண்டுகோளை ஏற்று கன்னட, ஆந்திரா, மலையாளத் திரையுலகினர் இத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.