Sunday, June 06, 2010

இலங்கையின் போர்க் குற்றத்தில் ஐ. நா வுக்கு பங்குண்டா?: லூயிஸ் ஆர்பர் கேள்வி

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றத்தில் ஐக்கிய நாடுகளிற்கும் பங்குண்டா என ஐக்கிய நாடுகள் சபை, சுய விசாரணை ஒன்றினையும் சுய விமர்சனம் ஒன்றையும் செய்ய வேண்டும் என லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை போர் உக்கிரமாக நடந்த வேளை அந்த பகுதியில் இருந்து தனது பணியாளர்களை வெளியேற்றியது தவறு. இவ்வாறான சூழல்களில் வழமையாக ஐக்கிய நாடுகள் சபை தனது பணியாளர்களை அதிகரித்து வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அவ்வாறு செய்யவில்லை ஏன்?

ஆகவே போரின்போதான யுத்த குற்றங்களுக்கு ஐக்கிய நாடுகளின் பங்கும் உள்ளதா என ஐக்கிய நாடுகள் சபை சுய விமர்சனம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.