Saturday, May 29, 2010

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு _

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர் கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரியானாவைச் சேர்ந்த ராஜேந்தர் சிங், சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்சங்க பாதுகாப்பு படை(சிஐஎஸ்எஸ்) பணியாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் விமான நிலைய 'பார்க்கிங்' பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, இன்று பகல் 1.00 ‌மணியளவில் அவரது கையில் இருந்த கார்பன் கன் ரக துப்பாக்கி தவறுதலாக வெடித்தது.

துப்பாக்கித் தரையை நோக்கி இருந்ததால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ராஜேந்தர் சிங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் துப்பாக்கி வெடிப்பால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.