கொழும்பில் சுயதொழில் புரிவோருக்கான சம்மேளனம் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரின் தலைமையில் கொழும்பு, பழைய சோனகத் தெருவில் அமைந்துள்ள உலகக் கட்டிட சந்தைத் தொகுதியில் இன்று முற்பகல் இந்நிகழ்வு நடைபெற்றது.
முச்சக்கர வண்டிச் சாரதிகள், கனரக வண்டிச் சாரதிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், மேசன் தொழிலாளர்கள், ரயில் நிலைய சுயதொழில் ஊழியர்கள் உட்பட சுயதொழில் செய்யும் பல்வேறு தரப்பினர் இச்சம்மேளனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தனர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.