இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களை அணுகி, ஆக்கமுறையான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு பிரித்தானிய கிறீஸ்தவ அமைப்பு ஒன்று பிரித்தானிய புதிய அரசாஙகத்தையும் அனைத்துலக அமைப்புக்களையும் கோரியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளமையை அந்த அமைப்பின் அறிக்கையில் கண்டித்துள்ளது.
இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கம் கண்டிப்பாக இலங்கையின் வடப்பிராந்திய தமிழர்களுக்கு உதவ வேண்டும் என, அதன் இலங்கை விவகார முகாமையாளர் பிரயன் மார்டின் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து தற்போது மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் முகாம்களில் சுமார் 76 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் எஞ்சியுள்ளனர்.
மீள் குடியேற்றம் செய்யப்படுகின்ற மக்கள் தொடர்பில் பல தொண்டு நிறுவனங்கள் பணியாற்றி வருகின்ற நிலையில்,முகாமில் உள்ள மக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு உதவி வழங்கி, துரிதமாக மீற் குடியேற்ற பிரித்தானியா மற்றும் சர்தேச சமூகங்கள் உதவி புரிய வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அத்துடன் அவர்களுக்கு உதவி வழங்கி நிலையான வாழ்வினை வழங்குவதற்கு பாரிய நிதி தேவைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





