அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய ஒன்பது இலங்கையர்களை அங்கிருந்து நாடு கடத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்கள் பொலிஸ் காவலில் இருந்துள்ளமையை அடுத்து, அவர்களுக்கான அரசியல் தஞ்சம் வழங்கும் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதுடன், அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்த்து கோரி வருகின்றமை, அரசாங்கத்துக்கு பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளதாக குடிவரவுதுறை அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ’ தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹவோர் விமான நிலையத்தில் வைத்து, பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 11 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் கடந்த ஒருவருட காலப்பகுதியில் அல்லது அதற்கு முன்னர் இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக இலங்கை குற்றவியல் புலனாய்வுத்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





